சென்னையில் ஒரு மழைக்காலம்
அட உண்மை தாங்க :) ஒரு வாரமா மழை ஜோனு கொட்டுது :)
ஆனா என்ன பண்ண? நாம தான் டெக்னாலஜி அது இது பீலா விட்டுட்டு நாலு சுவருக்குள்ளேயே நாளொரு பொழுதாய் கழிக்கறோமே ! காலை சூரியனை சோம்பேறித்தனத்தால் பார்க்கிறது இல்லை :) மாலை சூரியன் இருக்கே! மாலை-யா நாங்க "கடமைக்கு மறுபேர்" வாங்கினவங்களாச்சே :) இரவு இரண்டாம் ஜாமம் தான் வீட்டுக்கே போவோம் ...நிலா வேணும்னா பார்க்கலாம் :) :)
வருண பகவான் புண்ணியத்துல ரெண்டு நாள் முன்னாடி வீடு திரும்பும் போது நல்ல குளியல் :) (எத்தனை நாளுக்கு அப்புறம்?னு எல்லாம் கேக்கறது சரியில்லை) சில்லுனு காத்து வேற :) சூப்பரா இருந்துச்சு :)
மழை.....னு சொன்ன உடனே ஞாபகம் வரது......பள்ளி விடுமுறை தான் :) அடுத்து பஜ்ஜி, போண்டா, வேற்கடலை .....ஓ ஓ மேகம் வந்ததோ - பாட்டு....சின்ன வயசுல ப்ளாஸ்டிக் கவர்-ர தலைக்கு போட்டுட்டு சைக்கிள் ஓட்டினது.....அப்பா எங்களுக்காக எழுதின "வா வா மழையே .... வா வா மழையே" பாட்டு.....அம்மா சுட சுட பண்ற மைதா ஸ்வீட்.....ஜன்னலோர சாரல்....சொல்லிட்டே போகலாம்.....
இந்த நினைவுகள் தாலாட்ட .... நான் காத்திருக்கிறேன்.... விஜய்-க்கு வேலை முடிய ....அலுவலகத்தில் :) :) :)
4 Comments:
Good one Nirai!
Public aa solli aavathu avan kelambaraananu paakariya?
-Subha
I would love to hear ur dads poem dee : )
Kavingar magal, kadaikkutti - kallam kabadam illaama kirukka aarambichita (in blog)
:D
After a long long time I just visited my own blog & came to yours..... what a surprise, recent-a konjam blog panni irukka.... kalakara po.....
Nice blog Nirai...enakku innum onnu gnabagam varudhu mazhai-naa...chinna vayasula veettula irukkura paper ellaam koluthi kulir kaayuven..sooperaa irukkum...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home